டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய சமச்சீர் பாடப்புத்தகங்களை படிக்கும் முறை
Posted On 28 நவம்பர் 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான வினாக்கள் அனைத்தும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு சமச்சீர் பள்ளிப் பாடப் புத்தகங்களில் (School Books) இருந்துதான் 100% நேரடியாகக் கேட்கப்படுகின்றன. எனவே, சந்தையில் விற்கும் பிற வழிகாட்டிகளை விட பள்ளிப் புத்தகங்களைப் படிப்பதே முதன்மையானதாகும்.
பள்ளிப் புத்தகங்களை அப்படியே முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை படிக்காமல், டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ சிலபஸை (Official Syllabus) கையில் வைத்துக் கொண்டு, அதிலுள்ள தலைப்புகள் எந்தெந்த வகுப்புகளில் எந்தெந்தப் பக்கங்களில் உள்ளன என்பதைத் தேடிப் படிக்க வேண்டும்.
குறிப்பாக, புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் இருக்கும் "தெரிந்து கொள்வோம்", "உங்களுக்குத் தெரியுமா" மற்றும் பாக்ஸ் தகவல்கள் (Box Information) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; ஏனெனில் இதிலிருந்து தான் நேரடியாக வினாக்கள் அதிகம் எடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு இயலையும் படித்து முடித்தவுடன், உங்களது நினைவாற்றலைச் சோதித்துப் பார்க்க நமது தேர்வுத் தளத்தில் உள்ள இயல் வாரியான குவிஸ்களைப் பயன்படுத்தித் தேர்வு எழுதுங்கள். மேலும், முக்கியப் பாடக் குறிப்புகளைப் பிடிஎஃப் ஆகப் பதிவிறக்கம் செய்து அடிக்கடி ரிவிஷன் செய்யுங்கள், அரசு வேலை நிச்சயம் உங்களுடையதாகும்!